×

நான்தான் மாவட்ட கலெக்டர் மதுரை ஏ.சி பேச்சால் சர்ச்சை

மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்ய வந்த போலீஸ் உதவி கமிஷனர், ‘‘நான் தான் மாவட்ட கலெக்டர்’’ என கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை மீது ஹசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹா பகுதியில் உள்ள மரத்தில் சந்தனக்கூடு திருவிழா நாளன்று பிறை வடிவலான சிகப்பு வண்ணத்தில் கொடி கட்டப்படுவது வழக்கம். சிலர் அளித்த புகாரின் பேரில், இந்த கொடி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையான கொடியை அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, போலீஸ் உதவி கமிஷனர் சேகர் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன், சமரச பேச்சில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், திருப்பரங்குன்றம் மலை மீது அகற்றப்பட்ட பிறை வடிவிலான கொடியை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினர். அதற்கு போலீஸ் உதவி கமிஷனர் சேகர், ‘‘நான் தான் மாவட்ட கலெக்டர். கலைந்து செல்லுங்கள்’’ என கூறினார். போலீஸ் உடையில் இருந்தபடி உதவி கமிஷனர் இப்படிக்  கூறியதால் கோபமடைந்த இஸ்லாமியர்கள், ‘‘நாங்கள் படிப்பறிவில்லாதவர்களா? எங்களுக்கு கலெக்டரை தெரியும். நீங்கள் எப்படி கலெக்டர்’’ என கூறலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து போலீஸ் உதவி கமிஷனர், தான் கூறியதை திரும்பப் பெறுவதாக செய்வதாக கூறியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்படி கூறினார். இதனைத்தொடர்ந்து, 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரவில் விடுதலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர்களுடன் போலீஸ் உதவி கமிஷனர் சேகர், நான் தான் கலெக்டர் என கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Nan ,District ,Madurai A. Chi , District Collector, Madurai AC, Controversy
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 32,258 மாணவர்கள் பயன்